Tamil Cinema's Stalwart Vijayakanth: அஜித் முதல் ஜெயலலிதா வரை... மிரட்டிய விஜயகாந்த்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.

Tamil Cinema's Stalwart Vijayakanth: அஜித் முதல் ஜெயலலிதா வரை... மிரட்டிய விஜயகாந்த்..!
Vijayakanth (Photo Credit: @Vijayabaskarofl)

டிசம்பர் 28, சென்னை (Chennai): சினிமா மற்றும் அரசியல் உலகில் வெறுக்கப்படவே முடியாத ஒரு நபராக வாழ்ந்து காட்டியவர் தான் நடிகர் மற்றும் முன்னாள் எதிர்கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த். கட்சியின் மேடையாக இருந்தாலும் சரி, சட்டப் பேரவையாக இருந்தாலும் சரி, தன்னுடைய துணிச்சலான பேச்சால் எதிரில் இருப்பவர்களை நடுங்க விடுபவர். அவர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை பற்றி தான், இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.

முதல் வாய்ப்பு: மதுரையில் உள்ள திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். ஆனால் வாழ்க்கை பாடத்தை அதிகமாக படித்தவர். பத்தாம் வகுப்பு முடித்தவுடன், தன் தந்தையின் அரிசி ஆலை நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் கலையின் மீது அவர் கொண்ட ஆர்வம், சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு ஓட வைத்துள்ளது. இவருக்கு 1978 ஆம் ஆண்டு தான் முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இயக்குனர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். Vijayakanth Passed Away: தமிழ் திரையுலகின் கருப்பு எம்.ஜி.ஆர்., பல குடும்பங்களின் குலதெய்வம்., தேமுதிக நிறுவனர் & தலைவர் "விஜயகாந்த்" காலமானார்..!

முதல் தலைமை பொறுப்பு: அடுத்ததாக 1980 ஆம் ஆண்டு தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து அடுத்த ஆண்டே, சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தில் நடித்து, திரை பயணத்தில் தனக்கொரு பாதையை உருவாக்கினார். தொடர்ந்து போலீஸ் ஆபீஸர் ஆக பல ஆக்சன் படங்களில் நடித்தார். தன்னுடைய நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் கேப்டன் என்ற பெயரை தனக்கான பெயராக செதுக்கி விட்டார் கேப்டன் விஜயகாந்த். 150 படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த் 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கர் தலைவரானார். அப்போது பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நடிகர் சங்கத்தின் கடன்களை அடைத்தவர். சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தியவர் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.

அஜித்தை மிரட்டிய விஜயகாந்த்: அரசியலாக இருந்தாலும் சரி, திரை உலகமாக இருந்தாலும் சரி கேப்டன் விஜயகாந்தின் தைரியத்திற்கும் துணிச்சலுக்கும் ஈடு இணையே கிடையாது. நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது, சங்கத்தின் கடன்களை அடைப்பதற்காக பல கலை நிகழ்ச்சிகளை விஜயகாந்த் நடத்தினார். அந்தக் கலை நிகழ்ச்சிகளில் அஜித்குமாரை கலந்து கொள்ளுமாறு கேப்டன் விஜயகாந்த் கூறினார். ஆனால் தல அஜித்தோ, கலந்து கொள்ளவில்லை. இதனால் கடுப்பான கேப்டன் விஜயகாந்த், அஜித்தின் வீட்டிற்கே சென்று மிரட்டியுள்ளார். தாங்கள் கலை நிகழ்ச்சிக்கு வராவிட்டால் உங்களுடைய படம் வெளியவே வராது என்று அதிரடியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பல விஷயங்களை அமல்படுத்தியவர் விஜயகாந்த் தான். புரொடக்ஷன் உணவை அறிமுகப்படுத்தியதே  விஜயகாந்த்தான். MEA Jai Shankar Meets President Putin: ரஷிய பிரதமரை நேரில் சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்; பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாற்றம்.!

கர்நாடக மண்ணிலேயே வேட்டி கட்டி மல்லு கட்டிய விஜயகாந்த்: 1996 ஆம் ஆண்டு தமிழ்செல்வன் படத்தின் படப்பிடிப்பிற்காக விஜயகாந்த் கர்நாடகா சென்றுள்ளார். அப்போது படத்தின் செட்டுக்காக போடப்பட்ட கடைகளில் தமிழ் பலகைகள் இருந்துள்ளன. அந்த சமயம் கர்நாடகாவில் காவிரி பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்திற்கு ஒரு கும்பல் வந்து தமிழ் பலகையை எடுக்குமாறு பிரச்சனை செய்துள்ளனர். இதனால் கடுப்பான விஜயகாந்த் இரும்பு ராடுகளை எடுத்துக்கொண்டு அடிப்பதற்காக சென்று விட்டார். இந்த அளவு தைரியமும் துணிச்சலும் இருக்கும் தன்னலமற்ற நடிகர் என்றால், அது கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் ஆக மட்டும் தான் இருப்பார்.

ஜெயலலிதாவையே நேருக்கு நேர் எதிர்த்துப் பேசிய கேப்டன்: 2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் எதிர்க்கட்சித் தலைவராக பங்கேற்ற விஜயகாந்த், இரும்பு பெண்மணி ஜெயலலிதாவை பல பேர் முன்னிலையில் மிரட்டி விட்டார். சட்டப்பேரவையில் ஜெயலலிதா, "விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள்" என்று ஆவேசமாக விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறி இருப்பார். அதற்கு உடனே விஜயகாந்த், "ஆளும் கட்சி எப்படி இடைத்தேர்தலில் வெற்றிபெரும் என்பது எங்களுக்கு தெரியும்" என்று எழுந்து நின்று, அவையே அமைதியாகும் படி கூறி இருப்பார். Guna Road Accident: கனகர லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து; 10 பேர் உடல் கருகி மரணம்., 14 பேர் படுகாயம்.!

நல்ல மனுஷன் என்று சொல்லாத வாயில்லை: நான் நம்பியவர்கள் என்னை ஏமாற்றினாலும் என்னை நம்பியவர்களை நான் ஏமாற்ற மாட்டேன் என்று கூறிய கேப்டன் விஜயகாந்த் இன்று இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தாலும் மக்களின் மனதை விட்டு என்றும் பிரியவே மாட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவரை நல்ல மனிதன் பா என்று சொல்லாத ஒருவர் கூட இல்லை. யாராலும் வெறுக்கப்படவே முடியாத ஒரு நபராக வாழ்ந்து காட்டி விட்டு சென்றுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement