டிசம்பர் 28, சென்னை (Chennai): ஆகஸ்ட் 25, 1952 ஆம் ஆண்டு அழகர்சாமி - ஆண்டாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த் (Vijayakanth). தமிழ் திரையுலகிலும், தமிழக அரசியலிலும் முக்கிய இடம்பெற்ற விஜயகாந்த், அவரின் ரசிகர்களால் கேப்டன் (Captain Vijayakanth), கருப்பு எம்ஜிஆர் என்று பல புனைபெயர்களால் அன்போடு போற்றப்பட்டார்.
திரைவாழ்க்கை தொடக்கம்: கடந்த 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து 1981 இல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த விஜயகாந்துக்கு தொடர் வெற்றிகள் குவிந்தது.
குரலுக்கு தமிழகமே அடிமை: அவரின் நடிப்பும், கம்பீரமான குரலும் தமிழக மக்களை கட்டிப்போட்டது. பல வெற்றித் திரைப்படங்களை திரையுலகுக்கு கொடுத்த விஜயகாந்த், எப்போதும் ஏழை-எளிய மக்களுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் உதவி செய்யும் தொண்டு உள்ளம் கொண்ட நபராகவும் இருந்து வந்துள்ளார். தன்னுடன் பணியாற்றும் சினிமா கலைஞர்களில் முதல் நிலை பணியாளர்கள், முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் சரிசமமான சாப்பாடு வழங்கி பலரது உள்ளங்களில் குடிகொண்வர் விஜயகாந்த்.
அன்பு அரவணைப்பில் அடையாளம்: சினிமா துறையில் பல்வேறு நலப்பணிகளை செய்துள்ள விஜயகாந்தின் நற்குணத்தால், பலரின் வீட்டில் அடுப்பு எரிந்து பலரும் பட்டினியின்றி மகிழ்ச்சியாக தங்களது குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தோற்றுவித்த விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 25 தொகுதிகளில் வெற்றி பெற்று பின் எதிர்க்கட்சியாக செயல்பட்டார். Ranbir Kapoor Hurting Religious Sentiments?: கிறிஸ்துமஸ் கேக் மீது மது ஊற்றி மந்திரம் சொன்ன ரன்பீர் கபூர்; மத வழிபாடுகளை அவமதித்ததாக புகார்.!
உடலநலக்குறைவு: அதனைத் தொடர்ந்து, அரசியலில் பல்வேறு நிலைகளை கண்டுவிட்ட விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டில் தனது மனைவி மற்றும் மகன்களின் பராமரிப்பில் இருந்து வந்த விஜயகாந்த், அவ்வப்போது மட்டுமே வெளியில் தோன்றினார்.
மருத்துவமனையில் சிகிச்சை: இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட விஜயகாந்த், பூரண நலம்பெற்று வீட்டிற்கு திரும்பினார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதியான விஜயகாந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
காலம் ஆட்கொண்டது: பலரும் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப வேண்டி இறைவனை பிரார்த்தித்து வந்தனர். ஆனால், அது அனைத்தும் பொய்த்துப் போய் காலம் அவரை தற்போது ஆட்கொண்டு விட்டது. அவரின் மறைவு பலரையும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.