MP Bus Fire (Photo Credit: @vijaypsbaghel X_

டிசம்பர் 28, குணா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தில் (Bus Truck Crash), கனரக லாரியும் - பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பயங்கர விபத்து: நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் பேருந்துக்குள் சிக்கிய 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்துரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Vijayakanth Passed Away: தமிழ் திரையுலகின் கருப்பு எம்.ஜி.ஆர்., பல குடும்பங்களின் குலதெய்வம்., தேமுதிக நிறுவனர் & தலைவர் "விஜயகாந்த்" காலமானார்..! 

விடுமுறையால் அதிகம் பயணித்த மக்கள்: இது குறித்த விசாரணையில், பேருந்து அங்குள்ள குணா நகரில் இருந்து ஆரோன் நகருக்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. 32 பேர் பயணிக்கும் பேருந்தில், விடுமுறை காரணமாக 40 பேர் பயணம் செய்துள்ளனர் என்பது உறுதியானது.

இரங்கலும், இழப்பீடும்: முற்றிலும் பேருந்து தீப்பிடித்து எறிந்ததில், தற்போது பேருந்தின் பாகங்கள் மட்டுமே எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. விபத்து தொடர்பாக தகவல் அறிந்த முதலமைச்சர் மோகன் யாதவ், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, தலா ரூபாய் 4 இலட்சம் வழங்க உத்தரவிட்டார்.