டிசம்பர் 28, மாஸ்கோ (World News): ரஷியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (Jai Shankar), ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் (Vladimir Putin) புதினை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ரஷிய அதிபரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இரு நாடுகளின் எதிர்கால விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்களை பரிமாறி கொண்டனர்.
இந்தியாவுடன் கொண்ட உறவுகள் முன்னேற்றம்: இந்த சந்திப்பின்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசுகையில், "நமது வர்த்தகம் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து, நம்பிக்கையான வேகத்தில் சீராக இருக்கிறது. நடப்பு ஆண்டில், கடந்த ஆண்டை விடவும் வளர்ச்சி விகிதங்கள் அதிகம் இருக்கின்றன. நாம் உயர்தொழில்நுட்பத்துறையில் வேலை செய்து வருகிறோம். உலகளவில் ரஷ்யாவுக்கு எதிராக நாடுகள் அணிதிரண்ட போதிலும், ஆசியாவில் நமது பாரம்பரிய நட்பு தொடர்ந்தது. இந்தியா, இந்திய (Indian Peoples) மக்களுடன் கொண்ட உறவுகள் முன்னேறி வருகின்றன. இது மகிழ்ச்சியை தருகிறது. Guna Road Accident: கனகர லாரி - பேருந்து மோதி பயங்கர விபத்து; 10 பேர் உடல் கருகி மரணம்., 14 பேர் படுகாயம்.!
அமைதியை விரும்பும் பிரதமர்: பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) நிலைப்பாடு என்பது எங்களுக்கு தெரியும். இவை குறித்து நாம் பேசியும் இருக்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் உள்ள சிக்கலான செயல்முறை மற்றும் அது சார்ந்த அணுகுமுறை குறித்தும் தெரிவித்து இருக்கிறேன். அவர் அமைதியான முறையில் இவ்விவகாரத்தை தீர்க்க முயற்சி செய்வதையும், அதற்காக பாடுபடுவதையும் நான் நன்கு அறிவேன்" என்று தெரிவித்தார்.
ரஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம்: அதனைத்தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டில் ரஷியா வர ஆவலுடன் இருக்கிறார். இரண்டு நாடுகளின் அரசியல் நாட்காட்டியில் தேதியை கண்டறிந்த பின்பு சந்திப்பு நடைபெறும். வர்த்தகத்தில் தொடர்ந்து இரண்டு நாடுகளும் முன்னிலைப்பட பிரதமர் முட்டி விரும்புகிறார். அதற்கான நிலையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்று அதிபர் புதினிடம் தெரிவித்தார்.