Annamalai On Dy CM Udhayanidhi: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்; மறைமுகமாக திமுகவை விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை.!
சுயம், குடும்பம் என தலைவர்களுக்கான விடியலை ஏற்படுத்திவிட்டு, மக்களுக்கானது என்று கூறுவது எப்படிப்பட்டது? என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருக்கிறார்.
செப்டம்பர் 30, லண்டன் (Tamilnadu Politics): தமிழக அரசியலையே கடந்த சில நாட்களாக பேசுபொருளாக்கி இருந்த துணை முதல்வர் தொடர்பான பொறுப்பு சர்ச்சை நேற்றுடன் முற்றுப்புள்ளி வைத்து முடிக்கப்பட்டது. ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி வந்த திமுக தலைவர் & முதலைமச்சர் மு.க ஸ்டாலின், தனது மகனும், இளைஞரணி தலைவருமான தமிழ்நாட்டு மாநில விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்கினார். TVK Party Flag: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பிரச்சனை; பகுஜன் சமாஜுக்கு தேர்தல் ஆணையம் பதில்.. கொண்டாட்டத்தில் த.வெ.க தொண்டர்கள்.!
குவியும் வாழ்த்துக்கள்:
இந்த விசயத்திற்கு திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் பாராட்டுதல் வழங்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தொடர்ந்து வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. ஆட்சிப்பொறுப்புகளை பிரித்து வழங்கி, மக்களுக்கான சேவைகளை விரைந்து மேற்கொள்ள எதுவாக துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலண்டனுக்கு மேற்படிப்புக்கு சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதி பதவியேற்பை மறைமுகமாக சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை மறைமுக கண்டனம்:
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சிறப்புரிமை பெற்ற சிலருக்கு மட்டுமே சூரியன் பிரகாசிக்கிறது. கடந்த 40 மாதங்களாக மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு கிரகணம் நீடிக்கிறது. 'விடியல்' என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்: சுயம், குடும்பம் மற்றும் தலைவர்களுக்கான விடியல் இது" எனக் கூறியுள்ளார்.
அண்ணாமலை சூசகமாக விமர்சித்த எக்ஸ் பதிவு: