TN Alert App: புயல், மழை, வெள்ளமா? இனி கவலை வேண்டாம்... உடனடி அலர்ட்களை 'TN Alert' செயலியில் பெறுங்கள்.. விபரம் உள்ளே.!

புயல், வெள்ளம், மழை எச்சரிக்கை உட்பட இயற்கை பேரிடர்கள் குறித்த அறிவிப்பை உடனடியாக பெற டின் அலர்ட் எனப்படும் செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

TN Alert App (Photo Credit: Team LatestLY)

அக்டோபர் 05, சென்னை (Chennai News): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், சமீபத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட அளவிலான ஆட்சியர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரிடம் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கேட்டறிந்து, அரசின் ஆலோசனைகளையும் வழங்கி இருந்தார்.

வானிலை அறிவிப்பை விரைந்து மக்களுக்கு கொண்டுசேர்க்க நடவடிக்கை:

மாநில அளவிலான வானிலையை உடனுக்குடன் தெரிவிக்க தேசிய மற்றும் மண்டல வானிலை ஆய்வு மையங்கள் இருக்கிறது எனினும், வானிலை நிலவரம் தொடர்பாக மண்டல ஆய்வு மையங்கள் தெரிவிக்கும் தகவலை, ஊடகங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்துகின்றன. Three Boys Drown In Lake: ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி.. குடும்பத்தினர் சோகம்..!

TN Alert App (Photo Credit: Play store)

டிஎன் அலர்ட்:

இதனை மேலும் விரைவுபடுத்தும் பொருட்டு, டிஎன் அலர்ட் எனப்படும் ஸ்மார்ட்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று டிஎன் அலர்ட் (TN Alert) என டைப் செய்து தேடவேண்டும். மேற்கூறிய புகைப்படத்தில் உள்ளவாறு லோகோவுடன் இருக்கும் செயலியை கிளிக் செய்த் உபதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

செயலியின் விபரம் & சிறப்பம்சங்கள்:

பதிவிறக்கம் செய்தபின்னர், மொபைல் செயலியை இயக்கி அதற்குள் உலாவ வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்கு அனுமதியை அல்லது நிராகரிப்பை வழங்கிவிட்டு உள்ளே சென்றால், நமது இருப்பிடத்தை (Enable Location) தேர்வு செய்யச் சொல்லும். சில நேரம் நமது செல்போன் செட்டிங்ஸ் ஒருசில செயலிகளுக்கு லொகேஷனை அனுமதிக்காது. நாம் தாமாக சென்று அதனை ஆக்டிவேட் செய்வது போல இருக்கும். டிஎன் அலர்ட் செயலியை பதிவிறக்கம் செய்தபின்னர், லொகேஷன் சார்ந்த பிரச்சனையை எதிர்கொண்டால் லொகேஷன் செட்டிங்ஸ் (Location Settings) பக்கத்திற்கு சென்று, டிஎன் அலர்ட் செயலியை தேர்வு செய்து, லொகேஷன் அனுமதியில் நிரந்தரம் (Permanant or Location Servies on All Time) என்பதை தேர்வு செய்தால், டிஎன் அலர்ட் செயலி நமக்கு உடனடி அறிவிப்புகளை வழங்கத் தொடங்கிவிடும். அதில் நாம் நமது விபரத்தை பதிவு செய்து கருத்தும் பகிரலாம். புயல், வெள்ளம் போன்ற காலங்களில், இதன் வாயிலாக உதவியும் கோரலாம். மாவட்ட வாரியாகவும், தேசிய வாரியாகவும் அவசர உதவி எண்களும் இணைக்கப்பட்டுள்ளன.