Teacher Arrest: பள்ளி மாணவிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது..!
விருதுநகரில் பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை 23, சாத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அமைந்துள்ள அரசுப்பள்ளியில் தங்கப்பாண்டியன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். திருமணமான இவர், அதே பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் பழகியுள்ளார். அந்த மாணவியிடம் செல்போன் இல்லாததால், அவரது தாய் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். Teenager Misbehaved With Young Girl: தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறல்; வாலிபருக்கு அடி, உதை..!
இந்நிலையில், அந்த எண்ணுக்கு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஆபாச படங்கள் (Pornographic Images) மற்றும் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஆசிரியர் தங்கப்பாண்டியனின் மனைவி தனது கணவரின் செல்போனில் இருந்து மற்றொரு எண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுபற்றி தகவலறிந்து மாணவியின் தாய் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை செல்போனை வாங்கி பார்த்தபோது, ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மாணவியிடம் விசாரித்தபோது, ஆசிரியர் தங்கப்பாண்டியனின் செல்போனில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவியின் தந்தை சாத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் தங்கப்பாண்டியனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.