Teenager Misbehaved With Young Girl: தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறல்; வாலிபருக்கு அடி, உதை..!
ஈரோட்டில் ரயில்வே மேம்பாலத்தில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபரை பொதுமக்கள் அடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஜூலை 23, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் இருந்து ரயில் நகர் செல்லும் வலியில் ரயில்வே மேம்பாலம் (Railway Overpass) அமைந்துள்ளது. இந்த சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் 20 வயது இளம்பெண் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு நடந்து சென்ற 25 வயது வாலிபர் அந்த இளம்பெண்ணின் கையை இழுத்து பிடித்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், அந்த பெண் அதிர்ச்சியடைந்து அலறி சத்தமிட்டு கத்தியுள்ளார். இதனைகேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை பிடித்து அடித்து உதைத்தனர். CSG Vs TGC Highlights: சேப்பாக் அணி அதிரடி ஆட்டம்; 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு காவல்துறையினர், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், 'தான் யாரிடமும் தவறாக நடக்கவில்லை எனவும், உறவினர் வீட்டு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும்' தெரிவித்துள்ளார். ஆனால், அங்குள்ள பொதுமக்கள் நடந்தவற்றை கூறியுள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

