12th Student Suicide: பிளஸ்-2 தேர்வு முடிவுகள்; இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி - ஒருவர் பலி..!
ராமநாதபுரத்தில் பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மே 07, ராமநாதபுரம் (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது மகள் சவுமியா என்ற கிஷோர்னி (வயது 17). இவர் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் பிளஸ்-2 தேர்வுக்கான (Exam Result) முடிவுகள் வெளிவந்தன. தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற சவுமியா, தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மிகுந்த மனஉலைச்சலில் இருந்துள்ளார். World First 6G: 6 ஜி 100 ஜிபிபிஎஸ் நெட்ஒர்க்கை செயல்படுத்தும் 6ஜி சாதனம்; மாஸ் காட்டிய ஜப்பான்.! விபரம் உள்ளே.!
இதன்காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சவுமியா, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கேணிக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இறந்து கிடைந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அடுத்ததாக, திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள பூசேரி கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 17) என்ற மாணவி, ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதி, நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தான் குறைந்த மதிப்பெண் பெற்றதாக எண்ணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர், அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஒரே நாளில் இரண்டு மாணவிகள், தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.