6G (Photo Credit: Pixabay)

 06, டோக்கியோ (Technology News): தொலைத்தொடர்பு சேவை என்பது தற்போது பல உலகநாடுகளில் 5 ஜியை செயல்படுத்தி இருக்கிறது. விரைவில் 6 ஜி உலகளவில் (6G Technology) அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் 4 ஜி மற்றும் 5 ஜி நெட்ஒர்க் பிரதானமாக உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பான் 6ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் 6ஜி நெட்ஒர்க் அமைப்பு 100 ஜிபி டேட்டாவை நொடியில் பதிவிறக்கம் செய்யும் திறனை கொண்டது என்பதால் அதிவேக உச்சவரம்பாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ICSE 12th Result 2024 Topper Rakshita Lohani: ஐசிஎஸ்இ 10, +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதலிடம் பிடித்த பெண் யார்?.! 

சோதனை முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது: 5 ஜி தொழில்நுட்பத்தை காட்டிலும் 6 ஜி தொழில்நுட்பம் என்பது 100 மடங்கு வேகம் அதிகமானது ஆகும். இதனால் நமது தரவுகள் அனுப்பும் செயல்படும் 20 மடங்கு முன்னேற்றம் காணும் எனவும் நம்பப்படுகிறது. உலகளவில் 6 ஜி சாதனத்தின் வழியாக ஜப்பானிய தொலைத்தொடர்புத்துறை தனது ஒத்துழைப்போடு உருவாக்கிய வலையமைப்பை சோதனை செய்து அவற்றை உறுதி செய்துள்ளது. 6 ஜி சாதனத்தை ஜப்பானின் டோகோமோ, என்டிடி கார்ப்பரேஷன், என்இசி கார்ப்பரேஷன், புஜிட்சு ஆகியவை உருவாக்கியுள்ளன. இதற்கான சோதனை ஏப்ரல் மாதம் 11ம் தேதி நிறைவுபெற்றுள்ளது. இதனால் 6 ஜி தொழில்நுட்ப சோதனையில் இது மைல் கல்லாகவும் பார்க்கப்படுகிறது. 14-year-old Girl Kills Brother In Chhattisgarh: "இனி போன் யூஸ் பண்ணாத.." என்ற அண்ணன்.. கடுப்பில் கோடரியால் வெட்டி கொன்ற தங்கை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

உயர் அதிர்வெண் அலைகளால் அதிவேகம்: 10 ஜிபிபிஎஸ் என்ற வரையறுக்கப்பட்ட இணையவேகத்தை வழங்கும் 5 ஜி நெட்வொர்க்குடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, 6 ஜி சாதனம் பல்வேறு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த சாதனத்தில் 100 ஜிபிபிஎஸ் வேகம் வரை செயல்திறனை வெளிப்படுத்த முடிகிறது. 300 ஜிஎச்இசட் பேண்டில் அதிவேக செயல்திறன் மாற்றமின்றி தொடர்கிறது. இதில் உயர் அதிர்வெண் பட்டையை பயன்படுத்தும் போது வேகத்தடையை மீறி செயல்படுகிறது. மழை, சூறாவளி போன்ற காலங்களில் இவை கட்டாயம் தாக்கத்தை நெட்வொர்க் அமைப்பில் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.