Construction Worker Murdered Woman:இளம்பெண் கொலை; ஆசைக்கு இணங்க மறுத்ததால் கட்டிட தொழிலாளி வெறிச்செயல்..!
ஏப்ரல் 03, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வசித்து வரும் தம்பதி ஆறுமுகம் (வயது 35)-சரண்யா (வயது 32). இருவரும் கட்டிட வேலைக்குச் சென்று வருகின்றனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எம்.ஜி.ஆர். நகர் பாரதிதாசன் சாலையில் இருக்கின்ற பழைய வீட்டை சரிபார்க்கும் கட்டிட பணிக்காக, சரண்யா கடந்த 29-ஆம் தேதி அங்கு சென்றுள்ளார். People Fear Due To Leopard Movement: சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்..! – பதைபதைக்கும் காட்சிகள்..!
இந்நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 47) என்பவர் சரண்யாவுடன் வேலை செய்யும் இடத்தில் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். அவரது ஆசைக்கு இணங்க தொந்தரவு செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சரண்யாவை, வேல்முருகன் தான் வைத்திருந்த சுத்தியால் அவரது தலையில் பலமாக தாக்கிவிட்டு (Young Woman Murder) அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர், சரண்யாவுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, எம்.ஜி.ஆர். நகர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் அசோக் நகர் உதவி கமிஷனர் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு இதனை கொலைவழக்காக பதிவு செய்துள்ளனர். கொலை செய்த வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.