Leopard in Mayiladuthurai (Photo Credit: @vengui2004 X)

ஏப்ரல் 03, மயிலாடுதுறை (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறி வந்த நிலையில், நேற்றிரவு வாய்க்கால் அருகே இருந்த பன்றியை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். BJP Annamalai Election Campaign In Coimbatore: கோவை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை.. வெள்ளக்கிணறு பகுதியில் கும்மி ஆடி அசத்தல்..!

இதனையடுத்து, வந்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் (Warning To People Due To Leopard Movement) என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையை கண்டால் 9360889724 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறு வனத்துறையினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் இருந்த செம்மங்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கும், பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளிக்கும் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்துள்ளார்.