Sexual Harassment: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியையின் கணவர் - போக்சோவில் கைது..!
மார்ச் 21, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை அவரது வீட்டில் டியூசன் நடத்தி வருகிறார். அதில், அவர் வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்காக சிறப்பு வகுப்புகளை அவர் வீட்டில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கணவர் (வயது 46) மடிக்கணினி பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் டியூசனுக்கு வரும் மாணவிகளை அவரது இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதும், வீட்டில் இருந்து கூட்டிக்கொண்டு பேருந்துநிலையத்தில் இறக்கிவிடுவதுமாக இருந்து வந்துள்ளார். Woman Complaint Against Policeman: திருமணமான 3 வது நாளே மனைவி கர்ப்பம் – காதலித்து ஏமாற்றிய காவலர்..!
இவ்வாறு, இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், வீட்டில் இருக்கும் போதும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. மாணவிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் ஆபாசமான முறையில் பேசி வந்துள்ளார். தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டதால், அதிர்ச்சியடைந்த மாணவிகள் கோயம்புத்தூரில் உள்ள பெண் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளை செல்போன் மூலம் பேசி நடந்ததை கூறி புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில், வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியையின் கணவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், டியூசனுக்கு சென்ற மாணவிகளிடம் ஆசிரியையின் கணவர் பாலியல் தொந்தரவு செய்துவந்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.