மார்ச் 21, வேளாங்கண்ணி (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த பெரியதும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கும், வேதாரண்யம் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை செய்யும் அருணுக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. இதனிடையே, இருவரும் அடிக்கடி நாகப்பட்டினம் காவலர் குடியிருப்பில் தனிமையில் சந்தித்துள்ளனர். இவர்களின் காதல் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Gun Shot In Street Dogs: தெரு நாய்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது – சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்..!

இதனையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு சுகன்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான மூன்று நாட்களிலேயே சுகன்யா கர்ப்பமாக இருப்பது அவருடைய கணவருக்கு தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த கணவர் அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். சுகன்யா மனம் நொந்துபோன நிலையில், அவருடைய காதலர் அருணுக்கு நடந்ததை பற்றி கூறியுள்ளார். அருண் அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி மேலும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தற்போது, இரண்டு வருடங்கள் ஆன நிலையில் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. இதற்கிடையில், வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொள்ள அருணுக்கு அவரின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இந்த தகவல் அறிந்த சுகன்யா, நாகை எஸ்.பி ஹர்ஷ் சிங் அவர்களை சந்தித்து காவலராக பணிபுரியும் அருண் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி, திருமணம் செய்துகொள்ளவதாக கூறி ஏமாற்றிவிட்டு தன்னை மிரட்டியுள்ளார் என்றும் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், அருணின் அக்கா என் தம்பியின் மீது எந்த தவறும் இல்லை. சுகன்யாதான் என் தம்பியை ஏமாற்றி வேறொருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துள்ளர் என கத்தி பேசியுள்ளார். மேலும், அவர் பணத்திற்காகவே தற்போது பொய் புகார் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், நாகை எஸ்.பி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.