Seizure Of Beedi Leaf Bundles: சுமார் 3 டன் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்; காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான 3 டன் பீடி இலை மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Police Station file pic (Photo Credit: wikipedia)

ஜூலை 05, தூத்துக்குடி (Tuticorin News): தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி பிரதாப்பன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் சைரஸ் தலைமையிலான காவல்துறையினர் இன்று (ஜூலை 05) அதிகாலை திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த லாரியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்தனர். Puliyodharai Recipe: நாளை சனிக்கிழமை.. கோவில் ஸ்டைலில் புளியோதரை செய்து அசத்துவது எப்படி..?

அப்போது அந்த லாரியில் 87 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் தலா 35 கிலோ எடை கொண்ட சுமார் 3 டன் பீடி இலைகள் (Beedi Leaves) இருப்பது தெரியவந்தது. காவல்துறையினரை கண்டதும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், பீடி இலை மூட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

பின்னர், பீடி இலை பண்டல்கள் மற்றும் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர், சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.