ஜூலை 05, சென்னை (Kitchen Tips): பெரும்பாலும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலில் சுவையான புளியோதரை தரப்படும். அதே ஸ்டைலில் வீட்டில் எப்படி சுவையான புளியோதரை செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதற்கு முதலில் நறுமணமான புளியோதரை பொடி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை வைத்து வெறும் 5 நிமிடங்களில் புளியோதரை (Puliyodharai) சாதம் தயார் செய்துவிடலாம். அவற்றை எப்படி தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பொடி செய்ய:
புளி - 50 கிராம்
கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு - 50 கிராம்
தனியா விதை - 2 மேசைக்கரண்டி
எள் - 3 தேக்கரண்டி
மிளகு, சீரகம் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி. Airtel Denies Data Breach: 37.5 கோடி ஏர்டெல் பயனாளர்களின் தரவுகள் விற்பனையா..? ஏர்டெல் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
புளியோதரை செய்ய:
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வேர்க்கடலை - 3 மேசைக்கரண்டி
உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
சாதம் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் மிதமான சூட்டில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, தனியா விதை, எள் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து, அதே கடாயில் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து எடுக்கவும்.
பின்னர், அதே கடாயில் நல்லெண்ணெய் அரை தேக்கரண்டி ஊற்றி அதில் காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மேலும், 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி புளியை அதில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து வைத்துள்ள அனைத்தையும் நன்கு ஆற வைக்கவும்.
பிறகு, ஒரு மிக்ஸியில் வறுத்து வைத்த மிளகாய், புளி இவை இரண்டையும் அரைத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ளவற்றை மிக்ஸியில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயப்பொடி போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். Bajaj CNG Bike Freedom 125 launch: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!
இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் கொட்டி மூடி வைக்க வேண்டும். சூப்பரான புளியோதரை பொடி தயார். இப்போது, புளியோதரை செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வேர்க்கடலை, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதில், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள புளியோதரை பொடியில் ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதில், ஒரு கப் அளவு சாதம் எடுத்து ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டால், அருமையான சுவையில் புளியோதரை சாதம் ரெடி.