Tamil Nadu Board Exam: 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றத்தை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.

TN School Student File Pic (Photo Credit: DTNext)

பிப்ரவரி 16, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு (10th class) மாணவர்களுக்கு தற்போது வரை 5 பாடங்கள் 500 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தற்போது புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டிலிருந்துதான் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Heart-Shaped Formations in Space: நாசா பகிர்ந்த இதய வடிவ விண்மீன் திரள்.. காதலர்கள் நெகிழ்ச்சி..!

புதிய அறிவிப்பின்படி, தமிழ் அல்லாத சிறுபான்மை மொழியை தாய் மொழியாக கொண்ட மாணவர்கள் இனி விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் 6 பாடங்களுக்கு தலா 100 மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். விருப்பப் பாடத்திற்கான தேர்ச்சி மதிப்பெண் 35. இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண்களும் இனி சான்றிதழில் அச்சிட்டு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.