Vijay’s TVK Flag Issue: விஜய்யின் கட்சி கொடியில் இடம்பெற்ற யானை.. எழுந்த குற்றச்சாட்டுக்கள்..!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23, சென்னை (Chennai News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்துள்ளார். இப்படமானது உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவர் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்தார். தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தொடர்ந்து, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்று கட்சி தொடங்கினார். மேலும் செப்டம்பர் இறுதி வாரத்தில் விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். The Hidden Details In TVK Flag: வாகை மலர் என்றால் என்ன? பயன்? எதற்கு பயன்பட்டது? வெற்றியை குறிக்கும் வாகை மலர்.. வரலாறு தெரியுமா?
கட்சியின் கொடி: இதனையடுத்து விஜய் அரசியல் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையைச் செயலகத்தில் த.வெ.க தலைவர் விஜய் தனது த.வெ.க கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகை மலரை (Vaagai Malar) சுற்றி இருக்கும் வளையத்தில் நட்சத்திரங்களும் இடம் பெற்றிருக்கிறது.
குற்றச்சாட்டு: இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கோடியில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் யானை பயன்படுத்தியுள்ளதாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆனந்தன் சென்னை காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கொடியில் கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் யானை கொடி இருப்பதாகவும் ஸ்பெயின் நாட்டு கொடியின் நிறங்களான சிவப்பும் மஞ்சளும் இருப்பதாகவும் சென்னை சமூக ஆர்வலர் ஒருவர் புகார் செய்துள்ளார்.