ஆகஸ்ட் 22, சென்னை (Chennai News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்துள்ளார். இப்படமானது உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவர் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்தார். தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தொடர்ந்து, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்று கட்சி தொடங்கினார். மேலும் செப்டம்பர் இறுதி வாரத்தில் விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். Thalapathy Vijay's TVK Flag: "தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி" - தமிழக வெற்றிக் கழக கொடி விழாவில் விஜய் உரை..!
கட்சியின் கொடி: இதனையடுத்து விஜய் அரசியல் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையைச் செயலகத்தில் த.வெ.க தலைவர் விஜய் தனது த.வெ.க கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. வாகை மலரை (Vaagai Malar) சுற்றி இருக்கும் வளையத்தில் நட்சத்திரங்களும் இடம் பெற்றிருக்கிறது.
வாகை மலர்: தமிழர்களின் ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் தான் வாகை மரம். வாகை மலரை அந்த காலத்தில் மக்கள் கழுத்திலும், காதிலும் அணிகலனாக அணிந்து கொள்வதாக சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பூக்கள் மிகவும் மிருதுவானவை, அதனை பாதுகாக்க வலுவான ஒன்று சுற்றி இருக்க வேண்டும். எனவே, அந்த பூ அழகாக வளர அதை சுற்றி வலுவான மிருகங்களை பாதுகாப்பிற்கு வைத்திருப்பது, இக்கொடியின் அர்த்தமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
வரலாறு: சங்ககாலத்தில் வாகைமலர் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்பட்டது. போருக்கு சென்ற தலைவன் சூடிவரும் மலரின் மாலையைப் பார்த்தேன் அவனது போரின் நிலையை அறிவர். வாகை மாலை சூடி வந்தால் தலைவன் வெற்றியோடு வருகின்றான் என்று அர்த்தம். வாதையை வெற்றி மலராகவே கண்டனர். மேலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டி வெற்றியை கொண்டாடியதாக சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. வெற்றிவாகை சூடினான் என்ற சொற்றொடர் இன்றுமே புழக்கத்திலும் உள்ளது. TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!
பயன்கள்: வாகையின் பூவும், மரத்தின் வேரும், மற்ற பல பகுதிகளும் சித்த மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பூக்கள் பூக்கும் காலங்களில் வாகையை தேடி தேனீக்களும் பூச்சிகளும், பறவைகளும் கூட்டம் கூட்டமாக வருவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. பூ பூக்கும் நாளில் பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய வாகை மரத்தை சமவெளி பகுதிகளிலும் நட்டு வளர்க்கலாம். நிழலுடன் கூடவே மருத்துவத்திற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் இவை பெரிதும் உதவும். கண் சார்ந்த நோய்கள், அழற்சி நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு வாகைப் பூ மற்றும் அதன் இலை பயன்படுகின்றன.