Three People Arrested: வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் அதிரடி கைது.. 8 லிட்டர் சாராயம் பறிமுதல்..!
ஈரோட்டில் வீட்டிற்குள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 29, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், மலையம்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈஞ்சம்பள்ளியில் சாராயம் (Liquor) காய்ச்சி விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. தகவலின்பேரில், ஈரோடு மதுவிலக்கு (Prohibition Of Alcohol) காவல்துறையினர் நேற்று காலை அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். Old Woman Murder By Couple: மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளை; இளம்தம்பதியினர் கைது.. சென்னையில் பயங்கரம்..!
இந்நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் சந்தேகம் ஏற்படும் வகையில் சில நபர்கள் சென்று வந்துள்ளனர். உடனே, காவல்துறையினர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, வீட்டிற்குள் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு தயாராக வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு சுமார் 8 லிட்டர் சாராயம், 30 லிட்டர் சாராயம் ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பேரல், அடுப்பு போன்றவற்றை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, சாராயம் காய்ச்சிய ஈஞ்சம்பள்ளி கொன்னம்பாளையம் மேற்கு தோட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40), அவல் பூந்துறை பழனிகவுண்டன் வலசை சேர்ந்த குமார் (வயது 34), பூந்துறை சேமூர் லிங்க கவுண்டன் வலசு அம்பேத்கார் நகரை சேர்ந்த கார்த்தி (வயது 28) ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.