TN Assembly: காவேரி விவகாரம், கூடுதல் செலவு மானிய கோரிக்கைகளுடன் தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.!
இன்றைய சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த பின்னர், சட்டப்பேரவை அலுவல் கூடி, தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்ற ஆலோசனையும் செய்து முடிவெடுக்கவுள்ளது.
அக்டோபர் 09, சென்னை (Chennai): தமிழ்நாடு சட்டப்பேரவை (TN Assembly Meeting) கூட்டத்தொடர், இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் நடப்பு 2023 - 2024ம் நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசால் அவையில் தாக்கல் செய்யப்படும். Virat Kohli Autograph: பயிற்சியின்போது தன்னை காணவந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கிய விராட்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
அதனைத்தொடர்ந்து, காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவினை மதித்து, தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கூறி, மத்திய அரசனை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரியவருகிறது.
அதேபோல, இன்றைய கூட்டம் முடிவடைந்த பின்னர், சட்டராவை அலுவல் கூடி, தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்ற ஆலோசனையும் செய்து முடிவெடுக்கவுள்ளது.