தமிழ்நாடு பள்ளிகளில் 1,996 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.. விபரம் இதோ.!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,996 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

TRB Recruitment (Photo Credit : Youtube / Wikipedia)

ஜூலை 10, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில பள்ளி வாரியத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் உரிய ஆசிரியர்கள் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குழப்ப சூழ்நிலையானது நிலவி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலும் விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டுமென தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் 1,996 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Gold Rate Today: மெல்ல உயரத்தொடங்கும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.! 

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு :

இது தொடர்பாக தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கணினி பயிற்றுநர் ஆகிய பணியிடத்துக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கு இன்று முதல் https://www.trb.tn.gov.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் :

தமிழ் - 216

ஆங்கிலம் - 197

கணிதம் - 232

இயற்பியல் - 233

வேதியியல் - 217

தாவரவியல் - 147

விலங்கியல் - 131

வணிகவியல் - 198

பொருளியல் - 169

வரலாறு - 68

புவியியல் - 15

அரசியல் அறிவியல் - 14

கணினி பயிற்றுநர் - 57

உடற்கல்வி இயக்குநர் - 102

ஆசிரியர் தேர்வு குறித்த விபரம்:

கல்வித் தகுதி, வயது, விண்ணப்பம் ஆகியவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்லைன் அப்ளிகேஷன் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெறும். மேலும் பிற விபரங்களுக்கு https://www.trb.tn.gov.in/admin/pdf/1660068677PG%20Notification%20final%2009.07.2025.pdf ல் விரிவாக பார்க்கவும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement