Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு ரூ.100 நாணயம் வெளியீடு; மத்திய அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.!

சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்ட விழாவில், கலைஞரின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.

MK Stalin & Rajnath Singh on Kalaignar 100 (Photo Credit: @TNDIPRNews X)

ஆகஸ்ட் 19, சென்னை (Chennai News): மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் (Muthuvel Karunanidhi) நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், கலைஞரின் உருவம் பொறித்த ரூபாய் 100 நாணயத்தை வெளியிட்டார். TN Govt Bus: பௌர்ணமி கிரிவலத்துக்கு திருவண்ணாமலை போறிங்களா?.. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு.! 

முதல்வர் பெருமிதம்:

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "கலைஞரின் ரூபாய் 100 நாணயம் வெளியிடும் நிகழ்ச்சிக்கு, எனது சிந்தனையில் முதல் நபராக தோன்றியவர் ராஜ்நாத் சிங். கட்சி ரீதியாக, கொள்கை ரீதியாக மாறுபட்ட கோணங்களில் அரசியலில் பயணித்தாலும், அவர் அனைவரிடமும் நட்பு பாராட்டி செயல்படுபவர் என்பதால் அவரை அழைத்து நாணயத்தை வெளியிட முடிவு செய்தேன். நம்மை உருவாக்கிய தலைவரின் சாதனைகளை இனி இந்தியாவே அறியும்" என கூறினார்.

நினைவிடத்தில் மரியாதை:

அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்ததும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன், எம்.பி கனிமொழி, பாஜக தலைவர்கள் அண்ணாமலை ஆகியோர் மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.