TN Govt Bus File Pics (Photo Credit: @jayapluschannel / @classicTNbus X)

ஆகஸ்ட் 18, சென்னை (Chennai News): பண்டிகைகள் நிறைந்த ஆடி மாதம் நிறைவடைந்துவிட்ட நிலையில், ஆவணி மாதம் தொடங்கிவிட்டது. ஆவணியில் தொடக்கமே பௌர்ணமி நாளை வழங்கி உச்சம்பெற்றுள்ள காரணத்தால், பலரும் திருவண்ணாமலைக்கு செல்ல தயாராகி இருக்கின்றனர். திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையாரின் கோவிலில் வழிபாடு, கிரிவலம் என அடுத்த 2 நாட்கள் பக்தர்களின் கூட்டமானது அண்ணாமலையாளரின் நமச்சிவாய மந்திரத்தை ஒலித்தவாறு திருவண்ணாமலையை வளம் வருவார்கள். ஆகஸ்ட் 19ம் தேதி, ஆவணி மாதம் வரும் பௌர்ணமி அவிட்டதுடன் இணைந்து ஆவணி அவிட்ட திருவிழாவாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. Thanjavur Accident: ஸ்டியரிங் லாக் ஆனதால் சோகம்; சாலையில் நொடியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரல் காட்சிகள்.! 

கிளாம்பாக்கம் & கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள்:

அதன்படி, திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர எதுவாக 18ம் தேதியான இன்று முதல் நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்கள் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 130 சிறப்பு பேருந்துகளும், நாளை 250 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் 50 குளிர்பதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும். அதேவேளையில், சென்னை கோயம்பேடு நகரில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை 40 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல 206 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மண்டலவாரியாக கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் இடங்களில், உடனடி சிறப்பு பேருந்துகளை இயக்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.