Young Man Dies: வேட்டை துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு; நண்பர்கள் இருவர் கைது..!

புதுக்கோட்டையில் பறவைகளை வேட்டையாட சென்ற இடத்தில், குண்டு வயிற்றில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Died file pic (Photo Credit: Pixabay)

ஜூலை 24, இலுப்பூர் (Pudukottai News): புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள கிராமத்தில் சரவணன், லட்சுமணன் உட்பட 4 பேர் பறவைகளை வேட்டையாட (Hunting) சென்றுள்ளனர். அப்போது, சரவணன் என்பவர் வேட்டை துப்பாக்கியை (Country Gun) சரி பார்த்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட குண்டு லட்சுமணன் வயிற்றில் பாய்ந்தது. இதனால், அங்கிருந்து சரவணன் தப்பி சென்றுள்ளார். உடன் இருந்த 2 நண்பர்கள் இருவரும் லட்சுமணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். Three Old Men Arrested: 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்; 3 முதியவர்கள் போக்சோவில் கைது..!

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், உடன் இருந்த கூட்டாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள சரவணனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif