WhatsApp New Feature Update: இனி ஸ்பேம் தொல்லை இல்லை.. வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்..!
வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது.
பிப்ரவரி 13, புதுடெல்லி (New Delhi): தற்போது கையில் செல்போன் வைத்திருந்தாலே ஒரு வித பயம் எல்லோருக்கும் உருவாகிறது. அதிலும் தினமும் ஸ்பேம் (Spam) அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வருவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதன் மூலம் ஏற்படும் மோசடிகள் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இதனாலேயே பல நேரங்களில் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக மோசடி அழைப்பாக இருக்கும் என்று எண்ணி அழைப்பை எடுக்காமல் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பல முக்கிய அழைப்புகளை தவறவிடுகின்றோம். நாம் இன்று ஒரு எண்ணை பிளாக் செய்தாலும், மீண்டும் புதிய எண்களில் இருந்து நம்மை தொடர்பு கொள்கிறார்கள். அதே போன்று வாட்ஸ்அப் (WhatsApp) செயலியிலும் தொடர்ந்து ஸ்பேம் மெசேஜ் வந்து கொண்டே உள்ளது. Farmers Protest: விவசாயிகள் பேரணி.. டெல்லி திக்ரி எல்லையில் பலத்த பாதுகாப்பு..!
இதற்காக வாட்ஸ் அப்பில் சமீபத்திய அப்டேட்டில் புதிய அம்சம் ஒன்று வந்திருக்கிறது. இது லாக் செய்யப்பட்ட திரையில் கூட, ஸ்பேம் அல்லது சந்தேகத்திற்குரிய நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருந்தால் அதை, லாக்கை எடுக்காமலே நோட்டிஃபிகேஷன் பகுதியிலேயே நம்பரை பிளாக் செய்யலாம். இது சந்தேகத்திற்கிடமான கணக்குகளை உடனடியாகத் தடுக்க பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.