Farmers Protest (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 13, புதுடெல்லி (New Delhi): இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே உள்ள ஷம்பு எல்லையில் இருந்து விவசாயிகள்  (Farmers), 'டெல்லி சலோ' (Delhi Chalo) என்ற அணிவகுப்பைத் தொடங்கினர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று பேரணியாக டெல்லிக்கு நடந்து செல்கின்றனர். Vetri Duraisamy Body Cremation In Chennai: வெற்றி துரைசாமி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் ஒப்படைப்பு.. சென்னையில் இன்று மாலை தகனம்..!

இந்த பேரணியை முன்னிட்டு தலைநகர் டெல்லியின் திக்ரி எல்லையில் (Tikri border) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக, டெல்லியில் ஏற்கனவே 144 தடையை அமல்படுத்தியுள்ளனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் தண்ணீர் பீரங்கி, சிமெண்ட் மற்றும் இரும்பு தடுப்புகள் ஆகியவைகளை அமைத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஹரியானா-பஞ்சாபி எல்லையில் உள்ள முசாஹிப் வாலா குக்கிராமத்திற்கு அருகில் சிர்சா-சண்டிகர் நெடுஞ்சாலையைத் தடுக்கும் வகையில் கனமான கற்கள் வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியானா எல்லையில், ஷம்பு எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.