Amazon Audible Layoff: தொடரும் பணிநீக்க நடவடிக்கை; களத்தில் இறங்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

தனியொரு நிறுவனத்தின் வளர்ச்சி, எதிர்காலம், நிதிச்சுமை, செலவினங்கள் குறைப்பு உட்பட பல்வேறு காரணங்களால் பணிநீக்க நடவடிக்கைகள் தொடருகின்றன.

Amazon Audible (Photo Credit: Pixabay)

ஜனவரி 12, கலிபோர்னியா (Technology News): சர்வதேச அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களாக செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்.சி.எல் உட்பட பல நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது பணியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து வருகிறது. எதிர்கால தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவின் அறிமுகம், நிறுவனத்தின் வளர்ச்சி, அதன் எதிர்கால நிதி பிரச்சனைகள் என பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்த பணி நீக்கங்கள் தொடர்கின்றன.

ஓராண்டில் 2.6 இலட்சம் பேர் வேலை இழப்பு: கடந்த ஆண்டு தொழில்நுட்ப பணியாளர்களிடையே இது சார்ந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து பெரிய அதிர்ச்சியை தந்தன. கடந்த ஓராண்டில் மட்டும் 1200 க்கும் அதிகமான உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், 260,771 பேரை பணிநீக்கம் செய்து இருந்தது. இந்நிலையில், சர்வதேச அளவில் ஓடிடி, ஆன்லைன் ஆர்டர் டெலிவரி உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அமேசான் நிறுவனம், தனது தொழில்நுட்ப பணியாளர்கள் எண்ணிக்கையில் 5 விழுக்காடை பணி வீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. Thoothukudi Shocker: ஓரினசேர்கைக்கு மறுத்த 8 வயது சிறுவன் கொலை: போதைக்கு அடிமையான 19 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.! 

Amazon Logo (Photo Credit: Pixabay)

170 பணியாளர்கள் வேலைக்கு ஆப்பு: இது தொடர்பாக புத்தாண்டை முன்னிட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனால் முன்னதாகவே அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் பிரிவில் 500 பேருக்கு வேலை இழப்பு என்பது ஏற்பட்டுள்ளது. அதேபோல. தற்போது ஐந்து விழுக்காடு தொழில்நுட்ப பணியாளர்களை அமேசான் நீக்க முடிவு செய்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது வரை அமேசான் 27 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்திருக்கிறது. தற்போதைய அமேசானின் பணிநீக்க நடவடிக்கையால் 170 தொழில்நுட்ப பணியாளர்கள் வேலையை இழக்கவுள்ளனர்.