ஜனவரி 12, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பாரை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மீன்பிடி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். முத்துக்குமாரின் மனைவி சாந்தி. இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகளுக்கு அஸ்வின் குமார் என்ற 8 வயதுடைய மகன் இருக்கிறார். சிறுவன் தனது வீட்டருகே இருக்கும் பள்ளியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் சிறுவனுக்கு காய்ச்சல் என்பதால், பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் இருந்துள்ளார். சாந்தி தனது மகளை பள்ளியில் விட்டுவர சென்று இருக்கிறார். இதனிடையே, சிறுவன் அஸ்வின் குமார் வீட்டின் முன்பு விழுந்து கிடந்துள்ளார்.
கழுத்தில் கத்திக்குத்து காயம்: இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை தூக்கியபோது கழுத்துப்பகுதியில் இரத்த காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் இதுகுறித்து காவல் துறையினர், 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலில் உயிர் பிரிந்துவிட்டதை உறுதி செய்தனர். காவல் துறையினரால் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அஸ்வின் குமார் கழுத்தில் கத்திக்குத்து காயம் தென்பட்டதால், காவல் துறையினர் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்தனர். IND Vs AFG T20i: ஆப்கானிஸ்தான் பந்துகளை சிதறவிட்ட இந்தியா: முதல் டி20 ஆட்டத்தில் அபார வெற்றி.!
அம்பலமான கொலை சம்பவம்: இந்நிலையில், அங்குள்ள கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற ஆரோக்கிய எட்வர்ட் கென்னடி என்பவரின் மகன் தாமஸ் என்ற ரகசியத்தை (வயது 19) அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, சிறுவனை தான் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
போதை இளைஞரின் அதிர்ச்சி செயல்: அந்த வாக்குமூலத்தில், "நான் மது, கஞ்சா உட்பட போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுவன் அஸ்வின் குமாரை பார்த்தேன். சிறுவனை தாக்கத்தை உறவுக்கு அழைத்தேன், வற்புறுத்தினேன். சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டான். இதனால் ஆத்திரமடைந்த நான், வீட்டில் காய் நறுக்க வைத்திருந்த கத்திய எடுத்து சிறுவனின் கழுத்தில் குத்தி தப்பிச்சென்றேன்" என கூறி இருக்கிறார். இதனையடுத்து, கொலையாளியின் வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரிகள், அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுப்பழக்கம் நாட்டிற்கும், வீட்டிற்கும், உடல்நலனுக்கு கேடு.. அது மரணத்தை ஏற்படுத்தும், அப்பாவியின் உயிரையும் பறிக்கும்.