அக்டோபர் 29, டெல்லி (Technology News): அமேசான் நிறுவனம் உலகளவில் சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் (Amazon Layoffs) செய்யவுள்ளது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4% ஆகும். இந்தியாவில் மட்டும் 800 முதல் 1,000 ஊழியர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கங்களை அதிகப்படுத்தி வருகின்றன. அதே வேளையில், அமேசான் நிறுவனம் பெருமளவில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இதன்காரணமாக நிறுவன ஊழியர்களின் தேவையை குறைத்து, செலவுகளை குறைக்கும் நோக்கில் பணிநீக்கம் செய்கிறது. Amazon Layoffs: 30,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த அமேசான்.. ஊழியர்களுக்கு பேரிடி..!
அமேசான் பணிநீக்கம்:
அமேசான் பணிநீக்கங்கள் AWS, பிரைம் வீடியோ மற்றும் ட்விட்ச் போன்ற பிரிவுகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகின்றன. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உள் வேலை வாய்ப்புகள், பணிநீக்க ஊதியம் மற்றும் கூடுதல் மாற்ற உதவி உள்ளிட்ட ஆதரவு வழங்கப்படும். அமேசான் இந்தியாவில் சுமார் 800 முதல் 1,000 நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிநீக்கங்கள் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.