IPL Auction 2025 Live

Apple Vision Pro: ஆப்பிள் விஷன் ப்ரோவின் விற்பனை தேதி அறிவிப்பு... இனி கம்ப்யூட்டருக்கு வேலையே இல்லை..!

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய கருவியை ஆப்பிள் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Apple Vision Pro (Photo Credit: @theapplehub X)

ஜனவரி 09, புதுடெல்லி (New Delhi): 2023ல் ஆப்பிள் நிறுவனம் அதன் விஷன் ப்ரோ ஹெட்செட் (Vision Pro Headset) மாடலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் கம்பியூட்டர் இல்லாமல், நீங்க உங்கள் வேலையை இந்த கருவியை தலையில் மாட்டிக் கொண்டு எந்த இடத்தில் இருந்தபடியும் உங்கள் வேலையை செய்து முடிக்க முடியும். எந்த செயலிகளையும் பயன்படுத்தலாம், படம் பார்த்து மகிழலாம். இப்போது வருகிற ஜனவரி 19ம் தேதி இந்த கருவியின் ப்ரீ-ஆர்டர் துவங்குகிறது என அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. மற்றும் பிப்ரவரி 2, 2024 முதல் ஷிப்பிங் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. Suryakumar Yadav Surgery Updates: சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சோகம்..!

இதன் விலை: இது தற்போது அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. கூடியவிரைவில் உலகெங்கும் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், முதலில் 256 GB மாடல் Vision Pro-வை மட்டும் விற்பனைக்கு கொண்டு வருகிறது ஆப்பிள். இதன் விலை $3,499. இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,07,399 ஆகும்.