15 Apps Banned From India: சூதாட்டம் உட்பட 15 ஆன்லைன் மோசடி செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு; அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று அதிரடி.!
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில அரசுக்கு விபரம் தெரியவந்து, மகாதேவ் செயலியை முடக்க எவ்வித கோரிக்கையும் வைக்கவில்லை.
நவமபர் 06, புதுடெல்லி (Technology News): தொழில்நுட்பங்களில் பல வளர்ச்சியை கண்டு வரும் இந்தியாவில், அதனை தவறாக பயன்படுத்துவோர் தொடர்ந்து அரசுக்கு பல்வேறு தடங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஆன்லைன் கேமிங் போன்ற பெட்டிங் செயலிகளால், மோசடிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் அமலாக்கத்துறையின் கோரிக்கையின் பெயரில், மத்திய அரசு நேற்று மகாதேவ் உட்பட 22 ஆளின் பெட்டிங் தொடர்பான செயலிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. Rajasthan Road Accident: இரயில் தண்டவாளத்தில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி., 28 பேர் படுகாயம்.!
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே இது தொடர்பாக சத்தீஸ்கர் மாநில அரசுக்கு விபரம் தெரியவந்து, அவர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தொடர்பான எந்த தகவலையும் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளாமல், அந்த செயல்களை முடக்க கோரிக்கை வைக்காமல் மாநில அரசு அமைதி காத்துள்ளனர்.
சத்தீஸ்கர் காவல் துறையில் பணியாற்றி வந்த 2 காவலர்கள் மேற்கூறிய மகாதேவ் செயலி மோசடி சம்பவத்தில், பண மோசடி தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.