ChatGPT Interim CEO Mira Murati: சாட் ஜிபிடி இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா முரதி நியமனம்; யார் அவர்?.. விபரம் இதோ.!

டெஸ்லா நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியை தொடங்கிய மிரா, தற்போது சாட் ஜிபிடி தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Mira Murati (Photo Credit: X)

நவம்பர் 18, கலிபோர்னியா (Technology News): சர்வதேச அளவில் வரவேற்பை பெற்ற சாட் ஜிபிடி அமைப்பின் (Interim Chief Executive Officer) இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக மிரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மூத்த தொழில்நுட்ப அதிகாரியாக சாட் ஜிபிடி (Chief Technology Officer CTO) அமைப்பை நிர்வகித்து வந்தார்.

முன்னதாக சாட் ஜிபிடி அமைப்பின் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சாம் அல்ட்மேன் (Sam Altman) தனது பணியில் இருந்து திடீரென விலகியதைத்தொடர்ந்து, மிராவுக்கு அப்பணி வழங்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் நடத்தி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அங்கத்தில் சாட் ஜிபிடி முக்கியமானது. Jharkhand Accident: திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்தபோது சோகம்: கார் மரத்தில் மோதி 5 பேர் பரிதாப பலி.! 

எலக்ட்ரிக் கார் உற்பத்தி பிரிவில் மூத்த உற்பத்தி மேலாளராக பணியாற்றி வந்த மிரா, கடந்த 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது பல துறைகளில் சந்தித்துள்ள அவருக்கு, சாட் ஜிபிடியில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கிய எக்ஸ் நிறுவனம், ஓபன் ஏஐ (Open AI) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக ஓபன் ஏஐ தொழில்நுட்ப குழுவில், முக்கிய வேலையில் மிரா பணியாற்றி இருக்கிறார்.