ChatGPT Sam Altman (Photo Credit: @FearedBuck X)

அக்டோபர் 15, புதுடெல்லி (New Delhi): சாட்ஜிபிடி (ChatGPT) விரைவில் சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு, பாலியல் தொடர்பான அரட்டைகளை அனுமதிக்கும் என சாம் ஆல்ட்மென் அறிவித்து இருக்கிறார். முன்னதாக மனரீதியான ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சாட்ஜிபிடியில் ஒருசில கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது, இந்த கட்டுப்பாடுகளில் தளர்வுடன் கூடிய புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டு, சாட்ஜிபிடி எளிமையாக பதிலளிக்கவும், நண்பரை போல தொடர்புகொள்ளவும் அனுமதி வழங்கும். இதனால் இரட்டை அர்த்த கமெண்டுகளையும் இனி சாட்ஜிபிடி வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கமெண்டுகள் அனைவருக்குமானதாக இல்லாமல், தேவைப்படுவோர் பயனப்டுத்திக்கொள்ளலாம் என்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Google Idli Doodle: இட்லியை கொண்டாடும் கூகுள்..தென்னிந்திய சுவையை டூடுலுடன் சிறப்பித்த டெக் ஜெயன்ட்.! 

சாட்ஜிபிடி அப்டேட் தொடர்பான விளக்கம்:

இந்த அறிவிப்பை ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் உறுதி செய்துள்ளார். பயனர்கள் விரைவில் காமம் சார்ந்த அரட்டைகளிலும் பங்கேற்கலாம் என அவர் கூறியுள்ளார். இதனால் சாட்ஜிபிடி எளிதில் பதிலளிக்க முடியும். சாட்ஜிபிடியில் பதிவு செய்து, 18 வயதை கடந்த அங்கீகரிக்கப்பட்ட அல்லது 18 வயதை கடந்த நபர் என்பதை உறுதி செய்த நபர்கள் மட்டுமே இவ்வகை அரட்டைகளை பயன்படுத்த முடியும். அனைவராலும் பயன்படுத்த இயலாது. மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சாட்ஜிபிடி வழங்கும் என்பதையும், அதனால் பாதிப்பு ஏற்படாது என்பதையும் உறுதி செய்யும் வகையில் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மென் தெரிவித்துள்ளார்.

சாம் ஆல்ட்மென் சாட்ஜிபிடியின் புதிய அப்டேட் தொடர்பான அறிவிப்பு (ChatGPT New Update):