Customs Officials Seize 26 iPhone: ட்ரெண்டாகும் ஐபோன் கடத்தல்.. 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விமான நிலையத்தில் பறிமுதல்..!

டெல்லி விமான நிலையத்தில் பெண் பயணிகளிடம் இருந்து 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Apple iPhone 16 Series (Photo Credit: @yours_truly0456 X)

அக்டோபர் 02, புதுடெல்லி (New Delhi): ஆப்பிள் நிறுவனத்தின் (Apple) ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) உலகளவில் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஐபோன் 16 செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. கடந்த முறை போலவே, இந்த முறையும் நான்கு மாடல்களை அறிமுகம் செய்தது. ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16) உடன், ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. 10 Years of Swachh Bharat: 10 ஆண்டுகளை நிறைவு செய்த தூய்மை இந்தியா.. பிரதமர் மோடிக்காக உலக தலைவர்கள் நெகிழ்ச்சி பதிவு..!

இந்நிலையில் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஒரு பெண் பயணி ஒருவர் 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உடன் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். அதுவும் ஐபோன்களை ஒரு வேனிட்டி பேக்கில் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்து, டிஷ்யூ பேப்பரில் சுற்றி கொண்டு வந்துள்ளார். ஆனால் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கினார். இதை அவரது மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் யார் தொடர்புடையவர் என்பதை தெரிந்து கொள்ள சுங்க அதிகாரிகள் (Customs Officials) தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர். ஐபோன் மாடல்களுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சட்டவிரோத இறக்குமதியைத் தடுக்க அதிகாரிகள் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர்.