PM Modi (Photo Credit: @NarendraModi X)

அக்டோபர் 02, புதுடெல்லி (New Delhi): தூய்மைக்கான மிக முக்கியமான மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Modi), இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் போது, சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான ரூ.9600 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அம்ருத் 2.0-ன் கீழ் நகர்ப்புற நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.6,800 கோடிக்கும் அதிகமான திட்டங்கள், தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் கீழ், கங்கை படுகை பகுதிகளில் நீரின் தரம் மற்றும் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட ரூ.1550 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 10 திட்டங்கள் மற்றும் கோபர்தன் திட்டத்தின் கீழ், ரூ.1332 கோடிக்கு மேல் மதிப்புள்ள 15 சுருக்கப்பட்ட உயிர்வாயு (சிபிஜி) ஆலை திட்டங்கள் இதில் அடங்கும். Man Feeds Beer to Dog: லைக்குக்காக இப்படியும் படுகேவல செயல்; நாய்க்கு மதுவை ஊற்றிவிட்டு வீடியோ.! போதையில் தள்ளாடிய செல்லப்பிராணி.!

பிரதமர் மோடி பதிவு: மேலும் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிப்பிடும் வகையில், #10YearsOfSwachhBharat எனும் ஹேஸ்டேக்கை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பள்ளி மாணவர்களுடன் தூய்மை செய்யும் புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, ”இன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நான் எனது இளம் நண்பர்களுடன் இந்த பகல் நேரத்திலும் தூய்மை இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்றேன். தூய்மை இந்தியா திட்டத்தை அனைவரும் வலுப்படுத்திக் கொண்டே இருக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

தூய்மை இந்தியா திட்டம் குறித்து பிரதமர் மோடி உற்சாகப் பதிவு:

தூய்மை இந்தியா திட்டம் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பதிவு:

தூய்மை இந்தியா திட்டம் குறித்து உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா பதிவு:

தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா பதிவு:

தூய்மை இந்தியா திட்டம் குறித்து டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா:

தூய்மை இந்தியா திட்டம் குறித்து மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பதிவு: