Dunzo Layoffs Continue: முதலீட்டாளர்களின் பங்களிப்பு பயனளிக்கவில்லை: 150-200 ஊழியர்கள் வரை பணிநீக்கம்: நிதி நெருக்கடியில் டன்சோ.!

அதன் காரணமாக 30-40 சதவீதம் வரை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Dunzo (Photo Credit: Twitter)

செப்டம்பர் 27, புது டெல்லி: ஆன்லைன் ஆர்டரின் மூலம் மளிகை பொருட்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும் டன்சோ (Dunzo) நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக 150-200 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் (Reliance) மற்றும் கூகுள் போன்ற பெரும் நிறுவனங்களை முதலீட்டாளர்களாகக் கொண்ட டன்சோ, தற்போது மேலும் புதிய முதலீட்டாளர்களின் ஆதரவோடு 35 மில்லியன் டாலர் வரை தங்களின் நிதியை அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பல்வேறு தரப்பிலிருந்து கிடைத்த தகவலின் படி டன்சோ நிறுவனம் கிட்டத்தட்ட 40% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே 400 ஊழியர்களை இரண்டு கட்டமாக பணிநீக்கம் செய்திருக்கிறது. Madhya Pradesh Shocker: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு: அலட்சியப்படுத்திய பொதுமக்கள்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்.!

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் பெங்களூரில் (Bangalore) இருக்கும் தங்களது அலுவலகத்தையும் காலி செய்யப் போவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபீர் பிஸ்வாஸ் (Kabeer Biswas) தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் நவம்பர் மாதத்தில் கிடைக்கும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

முன்னதாக இந்த நிறுவனம் ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய சம்பளத்தை நிதி நெருக்கடி காரணமாக அக்டோபர் முதல் வாரம் வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதோடு மட்டுமின்றி ஜூன் மாதத்திலிருந்து பிடித்து வைக்கப்பட்டிருந்த சம்பளத்தொகையை 12% வட்டியுடன் வழங்கப் போவதாக அந்நிறுவனம் ஊழியர்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது.

இந்த நிறுவனம் தற்போது வரை 500 மில்லியன் டாலர் வருவாயை குவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மட்டும் 300 மில்லியன் டாலர் திரட்டி இருக்கிறது.