Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 27, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் நகரத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கொடூரமாக கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். காயங்களுடன் அரை நிர்வாணமாக உதவி கேட்ட போது கூட வீதிகளில் இருந்தவர்கள் அவளை அலட்சியப்படுத்தி இருக்கின்றனர்.

அரை நிர்வாண கோலத்தில், ரத்தம் கசியும் நிலையில், சிறுமி ஒரு நபரிடம் உதவி கேட்க, அவர் சிறுமியை விரட்டும் காட்சி சிசிடிவி பதிவுகளில் காணப்பட்டது. ICC World Cup 2023 All Squads: 13வது ஆடவர் உலகக்கோப்பை 2023 போட்டி: 10 அணிகளுக்கான வீரர்கள் யார்-யார்?.. முழு விபரம் உள்ளே.!

வீதிகளில் பலரது வீடுகளின் கதவுகளை தட்டியும் யாரும் உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தட்டித் தடுமாறி அந்த சிறுமி ஒரு ஆசிரமத்தை சென்றடைந்திருக்கிறார். அங்கிருந்த சாமியார், சிறுமி பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறுமியின் உடலில் துண்டைப் போர்த்தி அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

சிறுமியின் அந்தரங்க பாகங்களில் பலத்த காயங்கள் இருந்ததால், முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக சிறுமி இந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆபத்தான கட்டத்தில் இருந்து காப்பாற்ற காவலர் ஒருவர் சிறுமிக்கு ரத்த தானம் செய்து இருக்கிறார்.

சிறுமி ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டதாகவும், ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்பாததால், அவள் யார் என்பதை விசாரிக்க முடியவில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். காவல்துறையினர் போஸ்கோ (POSCO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

இதுகுறித்து உஜ்ஜைன் மாவட்டத்தின் தலைமை காவல் அதிகாரி சச்சின் ஷர்மா, “மருத்துவ பரிசோதனைகளின் முடிவில் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு இது சம்பந்தமான தகவல் கிடைக்கும் பட்சத்தில் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.