Jio Airtel 5G Network: 5ஜி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு வந்தது அதிர்ச்சி செய்தி: அதிரடியாக உயரும் ரீசார்ஜ் கட்டணம்.!
சோதனை அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி நெட்ஒர்க் சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், செலவினங்களை கருத்தில் கொண்டு அவை விரைவில் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 14, புதுடெல்லி (New Delhi): இந்திய அளவில் ஜியோ மற்றும் ஏர்டெல் தொலைத்தொடர்பு (Airtel Jio 5G Service) நிறுவனங்கள், தங்களது பயனர்களுக்கு கடந்த சில மாதங்களாக அன்லிமிடெட் 5ஜி இணையவழி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைதொடர்பு சேவையும் 4ஜி-யிலிருந்து 5ஜி-யாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனர்கள் தனது அன்லிமிடெட் சேவையை வழங்கியது. அதன்பின் ஐடியாவும் தன்னை 5ஜி சேவையை வழங்கியது.
வரவேற்பை பெற்ற 5 ஜி: 4ஜி ஸ்மார்ட்போன்கள் வைத்துள்ள பயனர்களால் 5ஜி சேவையை பயன்படுத்த இயலாது. 5ஜி ஸ்மார்ட்போன் வைத்துள்ள பயனர்களுக்கு இந்த சேவையின் பலன் என்பது அதிகளவு கிடைத்தது. சில வினாடிகளில் ஜிபி அளவிலான தரம் கொண்ட வீடியோக்கள் கூடாது பதிவிறங்கும் வகையில் அதன் வேகம் அமைந்துள்ளது. இது 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களிடையே அன்லிமிடெட் சேவை வரவேற்பு பெற்றது.
விரைவில் கட்டணம் அறிவிப்பு: சோதனை அடிப்படையில் வழங்கப்பட்ட 5ஜி சேவைக்கு கட்டணம் வசூலிக்க கடந்த நவம்பர் மாதமே ஏர்டெல் சார்பில் முடிவெடுக்கப்ட்ட நிலையில், தற்போது வரை விலை உயர்த்தப்படாமல் இருந்தது. புத்தாண்டையடுத்து 5ஜி கட்டண விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. BiggBoss S7 Grand Finale: நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டம்: இன்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே..! தவறவிடாதீர்கள்.!!
10% to 15% கட்டண உயர்வு: இந்நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 4ஜி சேவையில் தற்காலிகமாக சோதனை அடிப்படையில் தங்களது 5ஜி சேவையை வழங்கி வந்த நிலையில், தற்போது ஐந்து முதல் பத்து விழுக்காடு கட்டண உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 5ஜி சோதனைக்காக இதுவரை ஆன செலவினங்களை குறைக்கவும், மேற்படி 5ஜி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த கட்டண உயர்வானது அமல்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
ஏர்டெல் குறைந்தபட்ச கட்டணம் உயரலாம்: இதனால் இன்னும் சில நாட்களில் அல்லது சில வாரங்களுக்குள் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இது ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், முதலில் அதனை இலவசமாக உபயோகம் செய்த பலரும் கட்டண உயர்வு எப்படி இருக்க போகிறது என்பது நினைத்து தவித்து வருகின்றனர். ஏர்டெல்லில் ஏற்கனவே குறைந்தபட்ச சேவை கட்டணம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்ட அந்நிலையில், அத்தொகை ரூ.250 ஆக உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.