Xiaomi 14 Series: சியோமி 14 சீரிஸ் போன்களின் குளோபல் வேரியண்ட்.. எப்போது வெளியாகும்?.!
சியோமி 14 சீரிஸ் போன்களின் குளோபல் வேரியண்ட் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பிப்ரவரி 12, புதுடெல்லி (New Delhi): சியோமி 14 சீரிஸ் (Xiaomi 14 Series) போன்களின் குளோபல் வேரியண்ட் மொபைலிற்கு ஈஎம்விகோ (EMVCo) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. இது ஹைபர்ஓஎஸ் (HyperOS) சப்போர்ட்டுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. Vetri Duraisamy Body Found In Satluj River: 8 நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணி.. வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு..!
சிறப்பம்சங்கள்: சியோமி 14 போனில் 6.36 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. மேலும் அதனுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் வருகிறது. இது 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி என்று 3 வேரியண்ட் கொண்டிருக்கிறது. அதில் 50 எம்பி மெயின் லைட் ப்யூஷன் 900 சென்சார் (Light Fusion 900 sensor) கேமரா வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.45,810 ஆகும். இது சீனாவில் வெளியாகி விட்டது. மேலும் இந்தியாவில் பிப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிமுகம் இருக்க வாய்ப்புள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)
