Vetri Duraisamy Body Found (Photo Credit: @irajashekaran X)

பிப்ரவரி 12, இமாச்சல பிரதேசம் (Himachal Pradesh): திரைப்பட இயக்குநரும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனுமான வெற்றி துரைசாமி (Vetri Duraisamy) பயணித்த கார் கடந்த ஞாயிற்றுக் கிழமை இமாச்சல பிரதேசத்தில் சட்லஜ் நதி அருகே விபத்துக்கு உள்ளானது.

வெற்றி மற்றும் கோபிநாத் (32) ஹிமாச்சலின் லாஹவுல்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கைப் பார்வையிடச் சென்றுள்ளனர், இருவரும் ஸ்பிட்டியில் இருந்து சிம்லாவை நோக்கி ஸ்பிதியில் உள்ள தபோவில் வசிக்கும் டென்சின் ஓட்டிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். கார் தேசிய நெடுஞ்சாலை-5ல் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் மீது விழுந்தது. Ranveer Singh and Johnny Sins Team Up: ஜானி சின்ஸுடன் இணைந்து நடித்த ரன்வீர்.. வெளியான விளம்பர வீடியோ..!

கார் கவிழ்ந்ததும், கோபிநாத் கீழே விழுந்து, பலத்த காயம் அடைந்து, கின்னூரில் உள்ள ரெக்காங் பியோவில் உள்ள பிராந்திய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் டென்சின் உயிரிழந்தார். டிரைவரின் உடலை சில மணிநேரங்களுக்குப் பிறகு தேடுதல் குழுவினர் மீட்டனர், ஆனால் வெற்றி கண்டுபிடிக்கப்படவில்லை.

வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு: வெற்றி துரைசாமி மாயமான நிலையில் அவரை தேடும் பணி 8வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர், ஸ்கூபா டைவிங் வீரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியினர் ஈடுபட்டனர். இந்த நிலையில், வெற்றியின் உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் கிடைக்கப்பெற்றுள்ளது. நதியின் அடியில் இருந்து வெற்றியின் உடலை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டு கொண்டு வந்தனர். தற்போது வெற்றியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.