Twitter Accounts Banned: கடந்த ஒரு மாதத்தில் 3.3 இலட்சம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு நீக்கம்: காரணம் என்ன?..!
ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு எதிராக செயல்பட்ட 10 இலட்சத்திற்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 15, புதுடெல்லி (Technology News): அன்றாடம் நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான கணக்குகள் மூலமாக பல்வேறு பதிவுகள் இடப்படுகின்றன. இவற்றில் நமக்கு தேவையானதும், தேவையில்லாததும் இருக்கும். தற்போதைய சட்டதிட்டங்கள் தனிமனிதனுக்கு பொருந்துவதை போல, அவர்கள் உபயோகம் செய்யும் செயலிகள் செயல்பாடுகளுக்கும் பொருந்துகின்றன. இவற்றில் ஆபாச இணையங்கள், பயங்கரவாதத்திற்கு துணைபோகும் கருத்துக்கள் கொண்ட இடுகைக்கு அரசு தடை விதிப்பதால், அவ்வாறான கருத்துக்கள் அகற்றப்படுகின்றன. அதனை பதிவிட்டவரின் கணக்கும் பறிபோகும்.
3 இலட்சம் கணக்குகள் முடக்கம்: கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 25 ஆம் தேதி வரை இந்தியாவில் மட்டும் 3,33,036 எக்ஸ் (ட்விட்டர்) கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எக்ஸ் கார்ப்பரேஷன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள ட்விட்டர், இந்தியாவை மையமாக வைத்து செயல்பட்டு வந்த ட்விட்டர் கணக்குகளில், பாலியல் ரீதியான காணொளிகள் மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோக்களை பதிவிட்ட கணக்குகள் முடக்கியிருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டங்கள்: இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகார்களின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று லட்சம் கணக்குகளில், 2,233 கணக்குகள் பயங்கரவாதம் தொடர்பான தகவலையும் பரப்பி இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விஷயத்தில் பல சட்டங்களை அமல்படுத்தி அதனை கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தி இருந்தது. அதன் பேரில், பேஸ்புக், வாட்சப், ட்விட்டர் உட்பட சமூக வலைதள நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தன. New Born Girl Baby Sales: பிறந்து 23 நாட்களேயான சொந்த பேத்தி, ரூ.30 ஆயிரம் பணத்திற்கு விற்பனை: முதிய தம்பதி அதிர்ச்சி செயல்.! அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொடர்ந்து சமூக வலைதளபக்கங்களும் அரசின் அறிவுரைக்கேற்ப செயல்பட்டு, பல கனவுகளை முடக்கி வந்தது. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இதில் 2700 க்கும் அதிகமான கணக்குகள் பயங்கரவாதத்தை பரப்புரை செய்துள்ளது. அதே சமயத்தில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே 5 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இதில் 1600 கணக்குகள் பயங்கரவாதத்திற்கு துணைபோகும் வகையில் செயல்பட்டு இருக்கின்றன. மொத்தமாக கடத்த ஆகஸ்ட் முதல் தற்போது வரை 10 இலட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.