டிசம்பர் 14, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, ஆனந்த்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்மணிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 23 நாட்களேயாகும் நிலையில், தனது தாயின் வீட்டில் பெண் இருந்துள்ளார்.
காத்திருந்த தாய்: இந்நிலையில், சம்பவத்தன்று குழந்தையும், அதனோடு அவரின் தாய் மற்றும் தந்தையும் காணவில்லை. இருவரும் அக்கம்-பக்கத்து வீட்டிற்கு சென்றிருப்பார்கள், மீண்டும் வந்துவிடுவார்கள் என பெண் காத்திருந்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் பலன் இல்லை.
தாய் காவல் நிலையத்தில் புகார்: இதனால் பதறிப்போன பெண்மணி தனது குழந்தை மயமாகிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தை அவரது பாட்டி மற்றும் தாத்தா ஆகியோரால் கடத்தி செல்லப்பட்டது உறுதியானது. HC On Dhoni’s Contempt Petition: எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு… வெளியாகிய தீர்ப்பு..!
தலைமறைவான தம்பதிகள்: கடத்தி செல்லப்பட்ட பெண் குழந்தையை ரூபாய் 30,000 பணத்திற்கு விற்பனை செய்து இருக்கின்றனர். கிடைத்த பணத்துடன் பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதிக்கு தப்பி சென்றுவிட்டனர். இந்த தகவலை உறுதிப்படுத்திய அதிகாரிகள், கயா விரைந்து இருவரையும் கைது செய்தனர்.
ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை: அவர்களிடம் விசாரணை நடத்தியதன்பேரில், பீகார் மாநிலத்தில் உள்ள பர்பான்ஸ் மாவட்டம் நரேந்திரபூர் பகுதியில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. தாத்தா பாட்டியால் குழந்தை கடத்தல் கும்பல் உதவியுடன் விற்பனை செய்யப்பட்ட குழந்தை, குழந்தையில்லாத தம்பதிக்கு ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
குழந்தை பத்திரமாக மீட்பு: முதிய தம்பதியின் வாக்குமூலத்தின் பேரில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டு, பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தாயுடன் சேர்க்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் பிற குழந்தை கடத்தல் கும்பல் குழுவை கண்டறிய விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.