BSNL Launches 4G Services: தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்..!

4-ஜி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4-ஜி செல்பேசி சேவையை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.

Bsnl 4g (Photo Credit: @drsangrampatil X)

ஜூலை 08, டெல்லி (Technology News): பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம், பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவில் இயங்கி வருகிறது. அதன் படி, பேஸ் IX.2 (Phase IX.2) திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் திருவள்ளூர் (Tiruvallur) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Vidaamuyarchi Second Look: முயற்சிகள் தோற்பதில்லை.. தல அஜித்தின் விடாமுயற்சி செகண்ட் லுக் வெளியீடு..!

இந்த திட்டமானது மையத்தின் Universal Service Obligation (USO) நிதியத்தால் நிதியளிக்கப்படுகிறது, திட்டச் செலவு ரூ.16.25 கோடி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள நிறுவனம், இந்த வீடியோவில் உள்நாட்டு 4G நெட்வொர்க் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. கடந்த மே மாதம், பிஎஸ்என்எல் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் 4ஜியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.