Elon Musk Shares AI Video: உலகத் தலைவர்களின் பேஷன் ஷோ.. எலான் மஸ்க் வெளியிட்ட ஏஐ வீடியோ..!
எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார்.
ஜூலை 23, சான் பிரான்சிஸ்கோ (Technology News): செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இன்றைய உலகில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது ஒரு கணினி மனிதனைபோன்று யோசித்தால், அல்லது மனிதன் போன்று செயல்படுவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு உதவுவதால், பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் AI தளங்களை உருவாக்கி வருகின்றது. இதனால் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல சாதனைகளைப் படைத்து வருகிறது. அதே நேரம் இதனால் அசல் எது, போலி எது என்பதை அடையாளம் காண்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது. Parandur Airport Gets Site Clearance: பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி..!
ஏஐ வீடியோ: இந்த நிலையில் உலகின் முக்கியமான பிரபலங்கள் பேஷன் ஷோவில் நடந்து செல்வது போல, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பதிவில் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வீடியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (US President Joe Biden) சக்கர நாற்காலியில் வருவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், போப் பிரான்சிஸ், பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) உள்ளிட்டோரும் வண்ணமயமான உடைகளில் வலம் வருவதைப்போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் சிஇஓ டிம் குக், மார்க் ஜுக்கர்பேர்க் மற்றும் எலான் மஸ்க்கும் வீடியோவில் உள்ளார்.