How to Detect Hidden Cameras: ஓட்டலில் சீக்ரெட் கேமரா நினைத்து பயமா? கவலையே வேண்டாம்.. ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி? விபரம் உள்ளே..!
அது எப்படி என்று இப்பதிவில் நாம் காணலாம்.
ஜூலை 24, சென்னை (Technology News): ஓட்டல் அறைகளில் மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களை (Hidden Cameras) கண்டுபிடிக்க சில ஆப்கள் உங்களுக்கு உதவும்.
ஹிட்டன் டிவைஸ் டிடெக்டர் கேமரா (Hidden Device Detector Camera): இந்த கேம் ஃபைண்டர் அல்லது ஸ்பை டிடெக்டர் ஆப் ஆனது எலக்ட்ரானிக் டிவைஸ்கள் வெளியிடும் கதிர்வீச்சின் தீவிரத்தை கண்டறிய மேக்னட்டிக் சென்சாரை பயன்படுத்துகிறது.
ஹிட்டன் கேமரா டிடெக்டர் (Hidden Camera Detector): இந்த ஆப்பில், ஸ்பீக்கர்கள் மற்றும் கேமராக்களின் மேக்னெட்டிக் செயல்பாட்டை கண்டறியும் மேக்னட்டோமீட்டர், அகச்சிவப்பு கேமராக்களை (infrared camera) கண்டறியும் கதிர்வீச்சு மீட்டர் உள்ளது. Electric vs Petrol Scooters: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் vs பெட்ரோல் ஸ்கூட்டர்.. எது வாங்கலாம்? கண்டிப்பா இது தெரியாம வாங்கப் போகாதீங்க..!
ஹிட்டன் கேமரா டிடெக்டர் ப்ரோ (Hidden Camera Detector Pro): இந்த ஆப் ஆனது ஒரு அறையின் சுற்றுப்புறங்களில் உள்ள உளவு கேமராக்கள் அல்லது மறைக்கப்பட்ட கேமராக்களை காட்டிக்கொடுக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஆனது மறைத்து வைக்கப்பட்டுள்ள மைக்ரோஃபோன்களையும் கண்டறியும்.
நோ ஹிட்டன் - ஸ்பை கேமரா ஃபைண்டர் (No hidden - spy camera finder): இந்த ஆப் ஆனது அனைத்து வகையான ரகசிய கேமராக்கள், மறைக்கப்பட்ட கேமராக்கள் மற்றும் மறைக்கப்பட்ட டிவைஸ்களை கண்டறிவதாக கூறுகிறது.