ஜூலை 24, சென்னை (Chennai): பெட்ரோல் (Petrol) விலை உயர்வு காரணமாக மக்கள் சமீப காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) அதிகளவில் வாங்க தொடங்கியுள்ளனர். ஆனால் எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டரில் எது வாங்குவது சரியானது என்று முடிவு செய்வது சில சமயங்களில் கடினமாகவே இருக்கிறது.
பயணத் தொலைவு: நீங்கள் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்தால், அதாவது, உங்கள் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கும் உள்ள தூரம் அதிகமாக இருந்தால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் முன் சில முக்கியமான விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான ஸ்கூட்டர்கள் முழு சார்ஜுக்கு 100 கிமீட்டருக்கும் குறைவான ரேஞ்ஜையே வழங்கும் வகையில் பேட்டரி பேக்கைக் கொண்டவையாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. பெட்ரோல் டூ-வீலரில் இந்த சிக்கல் இருக்காது. நொடிப்பொழுதில் பெட்ரோலை நிரப்பி விடலாம். ஆனால், மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய பல மணி நேரங்களை செலவிட வேண்டி இருக்கும். National Thermal Engineering Day 2024: தேசிய வெப்ப பொறியாளர்கள் தினம்.. அதன் வரலாறு என்ன தெரியுமா?!
சார்ஜ் நிலையங்கள்: தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களுக்கு பொது இடங்களில் சார்ஜ் செய்யும் வசதி மிக குறைவாகவே இருக்கிறது. சார்ஜிங் கட்டமைப்பு பற்றாக் குறையால் மட்டுமே பலர் மின்சார வாகனத்தை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் வருங்காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சார்ஜ் ஏற்று வசதி அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் பெட்ரோல் நிலையங்களோ திரும்பும் பக்கமெல்லாம் உள்ளது.
பராமரிப்பு: வாகனங்களை நாம் அவ்வப்போது சர்வீசுக்கு விட வேண்டும். பெட்ரோல் ஸ்கூட்டர்களை முறையாக சர்வீஸ் விட்டால் சராசரியாக 4800 ரூபாய் வரை செலவாகும். அதேநேரம் மின்சார வாகனங்களுக்கு இது சரிபாதியாகக் குறையும். அதாவது ரூ. 2400 மட்டுமே செலவாகும். Nepal Plane Crash: பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து; 19 பயணிகளின் நிலை என்ன..?
விலை: ஸ்கூட்டி வடிவிலான இருசக்கர வாகனங்களின் விலை 80 ஆயிரம் முதல் 1.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் எலக்ட்ரிக் வாகனங்கள் 1.46 லட்சம் 1.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது.