Realme P1 Series Launch: ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன் வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்ன?.!

ரியல்மி நிறுவனம் தற்போது புதிய ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது.

Realme P1 Series (Photo Credit: @SujanTharu66 X)

ஏப்ரல் 15, சென்னை (Technolgy News): இன்று ரியல்மி (Realme) நிறுவனம் புதிய ரியல்மி பி1 5ஜி மற்றும் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 5G and Realme P1 Pro 5G) போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி பி1 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் தளங்களில் early bird sale எனும் சிறப்பு விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கும். The All New Force Gurkha Teaser: "என்னது கார்க்கு 5 கதவை?" 5 கதவுகளுடன் வருகிறது கூர்கா எஸ்யூவி..!

ரியல்மி பி1 5ஜி சிறப்பம்சங்கள்: இந்த போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 chipset) வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1, ட்ரிபிள் ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.