X URL Transferred From twitter.com: இனி ட்விட்டர்.காம் கிடையாது.. "எக்ஸ்.காம்" மட்டும் தான்.. எலன் மஸ்கின் அதிரடி..!
ட்விட்டர்.காம் தற்போது எக்ஸ்.காம் என்று முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.
மே 17, கலிபோர்னியா (Technology News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். இருப்பினும் பயனர்களின் எண்ணிக்கையானது அதில் அதிகரித்துக் கொண்டே தான் வந்தது. World Telecommunication Day 2024: சர்வதேச தொலைதொடர்பு தினம்.. இதன் வரலாறு என்ன தெரியுமா?.!
அதுமட்டுமின்றி வெரிஃபைடு பயனாளிகளுக்கு வருமானத்தின் சில பகுதிகளை பகிர்ந்து கொடுகின்றார். இதனால் பல பயனாளர்கள் எக்ஸ தளத்தின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வலைத்தளமானது ட்விட்டர்.காம் என்று தான் செயல்பட்டு வந்தது. தற்போது அதனை எக்ஸ்.காம் என்று முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதனை எலன் மஸ்க் அவரது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.