மே 17, சென்னை (Chennai): உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இன்று ஒரு கிளிக் செய்தால் போதும், நொடியில் செய்திகள் அனுப்பப்படும். World Hypertension Day 2024: உலக உயர் இரத்த அழுத்தம் தினம்... உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள்..!
வரலாறு: இத்தகைய தகவல் தொடர்புக்கென முதன்முதலாக 1865 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி அன்று பாரீசில் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் நிறுவப்பட்டது. பின்பு, உலக தொலைத்தொடர்பு சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவங்கப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதி சர்வதேச தொலைதொடர்பு தினம் (World Telecommunication Day) கொண்டாடப்படுகிறது. இணையம் மற்றும் புதிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.